März 28, 2025

ஆனோல்ட்டிற்கு போத்தல் வீச்சு?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் இ.ஆனல்ட்டின்பிரச்சார கூட்டத்தின் போது சில பொதுமக்கள் போத்தல் வீசி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சுழிபுரம் கல்விளான் பகுதியில் நேற்று (24) இரவு நடந்த கூட்டத்தின் போதே மேற்படி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
குறித்த பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் பேசிக் கொண்டிருக்கும் போதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டத்திலிருந்த சிலர் இத்தாக்குதல் மேற்கொண்டனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.