Mai 12, 2025

தனிக்கல்லு வயல்வெளியும் பறிபோகின்றது?

தமிழ் தரப்புக்கள் ஒற்றை ஆசனத்திற்காக ஆளாளுக்கு முட்டி மோதிக்கொண்டிருக்க வவுனியா வடக்கு தமிழர்களின் எல்லைக்கிராமங்களின் ஒன்றான தனிக்கல்லு வயல்வெளி ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ளது.

பெரும்போக வயற்செய்கைக்காக வயல் விதைப்பதற்காக உழுவதற்கு செல்லும் விவசாயிகள் இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இப்பகுதியினை அண்மித்து சர்ச்சைக்குரிய புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ள விவகாரத்தின் மத்தியில் வயலுக்கு செல்லும் விவசாயிகள் திருப்பப்படுகின்றமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
இதனையண்டிய வெடுக்குநாறி மலையினை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.