ஒரே இரவில் துடைத்தெறிய முடியாது: இனவெறி தொடர்பில் குமார் சங்கக்காரா
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்காரா இனவெறி தொடர்பாக தனது கருத்தை ஒன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஒன்லைன் வீடியோ சேட் மூலம் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடனான கலந்துரையாடலில் இனவெறி குறித்த தனது கருத்தை பதிவு செய்துள்ள சங்கக்காரா,
இனவெறி பாகுபாடு என்பது தோல் நிறத்தினை மட்டுமே அடிப்படையாக கொண்டில்லாமல் வேறு சில வழிகளிலும் அரங்கேற வாய்ப்புகள் உள்ளன என்றார்.
மேலும், அதனை களைய ஒவ்வொருவரும் அது சார்ந்து பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதன் மூலம் மனதையும் திறக்கலாம்.
இந்த மாற்றம் எல்லாம் ஒரே இரவில் நடந்து விடாது. குறிப்பாக இதனை குழந்தைகளிடத்தில் பரவலாக கொண்டு செல்வது அவசியம் என்றார்.
மட்டுமின்றி மாற்றங்கள் அனைத்தும் ஒரே இரவில் ஏற்பட்டுவிடாது எனவும் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.