November 22, 2024

இந்த அரசாங்கத்தின் கடன் 1000 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது – ஹர்ஷ

தற்போதைய அரசாங்கம் நான்கு மாதத்திற்குள் நாட்டின் கடன் 1000 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் அதற்கமைய இலங்கை வரலாற்றில் முதல்முறையாக, கடன் பெற விண்ணப்பிக்கும் போது, ​​சர்வதேச சமூகம் எங்களிடம் உத்தரவாதம் கேட்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சமகி ஜன பலவேகயவின் ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது கடன் ஐந்து ஆண்டுகளில் ரூ .5600 பில்லியன் அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த அரசாங்கத்தின் கடன் 04 மாதங்களில் 1000 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. இவற்றை செய்தி நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரியப்படுத்துவதில்லை. கடந்த காலத்தில் ஒரு ரூபாய்க்கு என்றாலும் மணித்தியாலத்திற்கு மணித்தியாலம் அலட் செய்து கூறுவார்கள் இதோ இது இவ்வாறு தான் என்று.

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக, இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட அரசாக கடன் பெற விண்ணப்பித்தபோது, ​​அவர்கள் உத்தரவாதம் கேட்டார்கள். நியூயார்க் பெடரல் ரிசர்வ் அமெரிக்க கருவூல மசோதாக்களை – அதாவது எங்கள் இருப்புக்களில் உள்ளவற்றை – நியூயார்க் பெடரல் ரிசர்விற்கு அடகு வைக்க இலங்கையை கேட்டுள்ளது.  இதற்குக் காரணம், தற்போதைய பொருளாதாரக் கொள்கை அடுத்த சில மாதங்களில் மாற்றப்படாவிட்டால் நாம் ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை சர்வதேச சமூகம் கருதுகிறது. அரசாங்கம் அவ்வாறு கூறவில்லை என்றாலும், அரசாங்கத்தின் கடன் இப்போது மூச்சுத் திணறல் நிலைக்கு வந்துவிட்டது. என அவர் குறிப்பிட்டுள்ளார்.