November 22, 2024

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்துடனான நாற்பது வருடப் போராட்டமும்

 

மக்களின் போராட்டங்களை நசுக்க உலகின் எந்தவொரு நாட்டு அரசாங்கமும் எப்போதும் தயாராக வைத்திருக்கும் ஒரேயோர் ஆயுதம் பயங்கரவாதத் தடைச் சட்டமாகும். நம்நாட்டில் 1979ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் பல்வேறு அப்பாவிகளின் வாழ்க்கையைக் காவுகொண்டு அவர்களை இருள் சூழ்ந்த உலகினுள் தூக்கி வீசி விட்டு அமைதியாகத்தான் இருந்தது. ஆனால் இனப்பற்றும் மனிதமும் கொண்ட குறிப்பிட்ட சில சட்டத்தரணிகள்தான் இந்த அநீதிக்கு எதிராகச் சற்றும் பயப்படாமல் தீரத்துடன் குரல் கொடுத்தார்கள் அவர்களில் மிக முக்கியமானவர்தான் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா. கடந்த நாற்பது வருடகாலமாக இன விடுதலைக்காக போராடி இந்தச் சட்டத்தின் கீழும் அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழும் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டவர்களின் ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஆஜராகி இருந்தார். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னரும் கூட மேல் நீதிமன்றங்களில் பல நூறு குற்றப்பத்திரங்களை சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்தது ஆயினும் தவராசா சளைக்காமல் இன்னும் தீரத்துடன் அவற்றுக் கெதிராக வழக்காடிநீதியைப் பெற்றுக் கொடுக்கப் போராடுகின்றார் எந்தவிதமான விளம்பரங்களும் இல்லாமலேயே.
அவரது நாற்பது வருடச் சட்டத்துறை அனுபவத்தில் பிரச்சனைகளையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தியதும் கடுமையான உச்சத் தண்டணை வழங்கக்கூடியதுமான நீண்டகாலமாக வாதாடிய வழக்குகளில் தெரிவு செய்யப்பட்ட மிக முக்கியமான நாற்பது வழக்குகள் குறித்து சுருக்கமாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கையில் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகவும் விசேட செய்தியாகவும் அதிகமாகப் பரபரப்பாகப் பேசப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தொடுக்கப்பட்ட வழக்குகள் பெரும்பாலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்தான் போடப்பட்டன. அவற்றில் அதிகமான வழக்குகளில் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவே குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சட்டத்தரணியாக ஆஜர் ஆகினார். மும்மொழிகளிலும் புலமைமிக்க அவருக்குத் தனிச் சிங்களத்தில் வழக்குகளை எதிர்கொள்வதில் கூட எவ்விதமான சிக்கல்களும் இருக்கவில்லை.

சிங்கள மக்களுக்கு மத்தியிலும் பாதுகாப்புத் தரப்பினருக்கு மத்தியிலும் அதிக கோபத்தையும் ஆத்திரத்தையும் வெறுப்பையும் விதைத்த பல்வேறு வழக்குகளில் பயங்கரவாதியாகக் குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராவதற்கே அதிக நெஞ்சுரம் தேவைப்பட்ட போது பல சட்டத்தரணிகள் நமக்கேன் அதிகாரத்துடன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ள முயற்சிக்கும் போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா வாதாடினார். பாரதூரமாக சில வழக்குகள் உயிரச்சுருத்தல் மிகுந்த சூழ்நிலைகளைத் தோற்றுவித்தன அப்போதும் கூட அவர் கொஞ்சமும் அசராமல் அச்சுருத்தல்கள் பற்றி சற்றும் பொருட்படுத்தாமல் அல்லது அது குறித்துப் புலம்பிக் கொண்டிருக்காமல் தன் கடமையில் மட்டுமே கவனஞ் செலுத்தியதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.

பயங்கரலாதத் தடைச் சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட முதலாவது வழக்காக குட்டிமணி,ஜெகன் என்ற ஜெகநாதன் ஜெகன், கறுப்பன் என்ற ஞானவேல் ஆகிய மூவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில்; தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திகழ்கின்றது. இந்த வழக்குதான் இவர் சட்டத்தரணியாக சத்தியப்பிரமானம் எடுத்த பின்னர் சிரேஸ்ட சட்டத்தரணிகளான மு.சிவசிதம்பரம், நவரட்னம் (கரிகாலன்), உருத்திரமூர்த்தி ஆகியோருடன் கனிஸ்ட சட்டத்தரணியாக ஆஜராகிய முதல் வழக்காகும்.
1. குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் கைதும் மரண தண்டணையும் 1981-1983
1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி நடைபெற்ற நீர்வேலி மக்கள் வங்கிக் கொள்ளையிலும், இரட்டைக் கொலையுடனும் கைது செய்யப்பட்டவர்களுக்கு; எதிராக தொடர்புடையவர்கள் இரண்டு குற்றச்சாட்டுப் பத்திரங்கள் சட்டமா அதிபர் சிவா பசுபதியினால் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன
(1) நீர்வேலி வங்கிக் கொள்ளையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்த கான்ஸ்டபில் சிவனேசன் கொலை வழக்கு
(2) நீர்வேலி வங்கிக் கொள்ளை வழக்கு

முதல் வழக்கான சிவனேசன் கொலை வழக்கின் எதிரிகளான குட்டிமணி என்ற யோகச்சந்திரன் ஜெகன் என்ற ஜெகநாதன்;;;. கறுப்பன் என்ற ஞானவேல் எதிரிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்
கொன்ஸ்டபல் சிவனேசன் கொலை வழக்கின் எதிரிகளான குட்டிமணி என்ற யோகச்சந்திரன் ஜெகன் என்ற ஜெகநாதன்;;;. ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது மூன்றாவது எதிரியான கறுப்பன் என்ற ஞானவேல் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்;
அடுத்து நீர்வேலி வங்கிக் கொள்ளை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கில் குட்டிமணி என்ற யோகச்சந்திரன். தங்கத்துரை ஜெகன் என்ற ஜெகநாதன்;;;. எதிரிகளாக குறிப்பிடப்பட்டு மூவருக்கும் மரணதண்டணை விதிக்கப்பட்டது.

2. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் கொலை வழக்கில் சூழ்நிலைக் கைதியாகி இருந்த வில்லியம் மரியதாஸ் இறுதியில் விடுதலை 1989- 1996
3. விடுதலைப் புலிகளின் உளவுத்துறையை சார்ந்த அகிலன் கொழும்பில் கொலை செய்யப்பட்ட வழக்கு 1991
4. வீரகேசரி நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் சிறிகஜன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பட்டு செயல்படுவதாக சந்தேகத்தில் 1998 ஆகஸ்ட் மாதம் பயங்கரவாதத் தடைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட எந்தவாரு குற்றச்சாட்டையும் அரச தரப்பால் நிரூபிக்கமுடியாமல் போக 1999ம் ஆண்டு நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டார்.
5. மௌபிம பத்திரிகையின் ஊடகவியளாளர் பரமேஸ்வரி, சுசந்திகா 10 கிலோ எடையுள்ள தற்கொலை வெடிகுண்டை உடமையில் வைத்திருந்தாக கைதும் விடுதலையும் – 2006
6. ஈகுவாலிட்டி ‘நிறுவனத்தின் உரிமையாளரும் நன்கு அறியப்பட்ட பத்திரிகை வெளியீட்டாளருமான ஊடகவியளாளர் வடிவேலு யசிகரனும் சக்தி தொலைக்காட்சி நிகழ்சித் தயாரிப்பாளரான வளர்மதியும்; கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 2008 இல் குற்றமற்றவர்களென விடுதலை செய்யப்பட்டனர்.
7. உதயன், சுடரொலியின் முன்னாள் ஆசிரியரும் காலைக் கதிரின் பிரதம ஆசிரியருமான மூத்த ஊடகவியளாளர் வித்தியாதரன் கைதும் விடுதiயும் : இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டத்தில் 2009ஆம் ஆண்டு மாசி மாதம் 20ஆம் திகதி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புலிகளின் இலகுரக விமானங்கள் இரண்டு கொழும்பிலும் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அருகாமையிலும் நடாத்திய தாக்குதலில் மூத்த ஊடகவியளாளரான வித்தியாதரனுக்கும் தொடர்புண்டு என்ற சந்தேகத்தில் 2009ஆம் ஆண்டு மாசி மாதம் 26ஆம் திகதி கைது செய்யப்பட்ட போதிலும் அவருக்கெதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் போக இறுதியில் விடுதலை செய்யப்பட்டார்.
ஊடகத்துறை சார்ந்த செயற்பாட்டாளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டபோதெல்லாம் சட்டதரணி தவராசா அவர்களுக்கு தீதியைப் பெற்றுக் கொடுப்பதில் எப்போதும் ஆர்வங் காட்டியவாராகவே இருந்நதார். எல்லா வழக்குகளிலும் அவரது சமூகப் பற்றே முதலில் வெளிப்பட்டது.

8. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவானந்தன் கிசோர் செஞ்சிலுவை சங்க உத்தியோகத்தராக கடமையாற்றியபோது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக 1999ம் ஆண்டு சித்திரை மாதம் பயங்கரவாதத் தடைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 2000ம் ஆண்டு ஆவணி மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
9. 2001ம் ஆண்டு மின்மாற்றிகள் சேதாரப்படுத்தப்பட்ட வழக்கில் செல்வராசா காந்தன் களுத்துறை மேல் நீதிமன்றால் 2006இல் விடுதலை

2001ஆம் ஆண்டில்; நாட்டின் பல பகுதிகளில் மின்சார சபைக்குச் சொந்தமான பல மின்இயக்கிகள் நாசமாக்கப்பட்டன இக் காலகட்டத்தில் களுத்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த மின் இயக்கியை சேதாரப்படுத்தியதாக செல்வராஜாவிற்கு எதிராக களுத்துறை மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் செல்வராஜா தமிழ்மொழியில் பொலிஸ் அத்pயட்சகருக்கு எழுதிக் கொடுத்த வாக்கமூலம் சுயமாக வழங்கப்பட்ட வாக்குமூலமென நீதிமன்று வாக்குமூலத்தை சான்றாக ஏற்றுக் கொண்டதையடுத்து பிரதான விசாரணை நடைபெற்றது எதிரி தரப்பு வாதமாக முன்வைக்கப்பட்டதாவது
குற்றஒப்புதல் வாக்குமூலத்தினை மட்டும் சான்றாகக் கொண்டு மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்பட்டதாக நீதிமன்றம் கட்டளை வழங்கிய போதிலும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களின் தன்னார்வத்; தன்மை கேள்விக்கு உட்படுவதினால் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து எதிரிகளை தண்டிக்க முடியாது என்ற வாதத்தையேற்ற நீதிமன்றம் ஐந்து வருட விசாரணையின் பின்னர் செல்வராஜாவை விடுதலை செய்தது.

10. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட டென்மார்க் கல்லூரி மாணவி சித்திரா விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவில் மருத்துவ தாதியாக செயல்பட்டதுடன் டென்மார்க்கில் விடுதலைப் புலிகளுக்கு நிதி;சேகரித்ததாக கைதும் விடுதலையும். மீண்டும் டென்மார்க் பயணமும் -1996
11. டென்மார்க் கல்லூரி மாணவி சித்திரா கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டவுடன் இலங்கைவந்த டென்மார்க் ஊடகவியளாளர்கள்; நால்வர் கைதும் விடுதலையும் 1996
12. ஜோன் என்ற பெண் தனது மகனைத் தேடி ஐரிசில் இருந்து இலங்கை வந்த போது 1996இல் விடுதலைப்புலிகளின் உளவாளி என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் ஆயினும் அவருக்காக வாதாடிய சட்டத்தரணி தவராசாவின் வாதத்திறமை அவரை விடுவிக்கச் செய்தது.
13. மட்டக்களப்பு போரதீவிலிருந்து கொழும்பில் தாக்குதல் நடாத்துவதற்காக ஆயுதங்கள் வெடி பொருட்களுடன் வந்ததாக 2004இல் கைது செய்யப்பட்ட கங்காதரன் 2013 இல் விடுதலையானார்.
14. யாழ்ப்பாண பிரதான பொலிஸ் அத்தியட்சகர் திரு. சால்ஸ் விஜயவர்தன யாழ்ப்பாண மாவட்டத்தின் இனுவிலில் வைத்து 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4 இல் விடுதலைப் புலிகளினால் கடத்திச் செல்லப்பட்டு மல்லாகத்தில் வைத்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட கோபி என்றும் வீரபாண்டியன் என்றும் அழைக்கப்படும் கதிரமலை வைதீகனை 2006 இல் விடுதலை செய்ய வைத்தார் சட்டத்தரணி தவராசா
15. கொழும்பில் நடாத்தப்பட்ட மத்திய வங்கி குண்டுத் தாக்குதலையடுத்து 1997ம் ஆண்டு தமிழீழ வடுதலைப் புலிகள் கலதாரி ஹோட்டல் மீது குண்டுத் தாக்குதல் நடாத்தியதில் சம்புத்தாலோக விகாராதிபதி விதானதெரனியதேரர். வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் உட்பட 35பேர் கொலை செய்யப்பட்டதுடன் 113 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் 92 வாகனங்கள் முற்றாக எரிக்கப்பட்டததாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கந்தசாமி பற்குணராசாவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டவழக்கில் ஏழாண்டு விசாரணையின் பின்னர் 2004இல் அவர் விடுதலையானார்
16. வெளிநாட்டு நாணய மோசடிக் குற்றச்சாட்டில் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட தமிழ் வர்த்தகர் வின்சேந்திரராஜன் விடுதலை 1998-1999
17. விடுதலைப் புலிகளுக்கு கடற்படை இரகசிய தகவல்களை வழங்கியதாக கடற்;படை வீரர் நவாப்தீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளிலிருந்தும் 14 வருடங்களின் பின்னர் விடுதலை 2000 – 2014
18. தற்கொலை அங்கிகள் பிஸ்டல் 02, கைக்குண்டு 2, வெடிபொருட்கள் கொழும்பு 12 கதிரேசன்; கோவிலில் மறைத்து வைத்திருந்ததாக 2000ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட தர்மகர்;த்தா வீரசுப்பிரமணியத்திற்கு எதிராகத் தாக்கல் செய்த வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் 2008ம் ஆண்டு விடுதலையான வீரசுப்பிரமணியம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இவ்விரு வழக்குகளிலும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவே வழக்காடி இருந்தார்.
19. 2005ம் ஆண்டு கொழும்பில் குண்டுத்தாக்குதலை நடாத்த கிளிநொச்சியிலிருந்து வெள்ளவத்தைக்கு வெடிகுண்டுகள். சி4 வெடிபொருட்கள் கிளைமோர் வெடிகுண்டுளை விடுதலைப்புலி உறுப்பினரான சிவபாதசுந்தரம் முகுந்தன் 250-9928 வாகனத்தில் கொண்டுவந்தாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 2010ம் ஆண்டு விடுதலை
20. பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய கொலைமுயற்சி வழக்கில் 2006ம் ஆண்டுகைது செய்யப்பட்ட பிரித்தானியப் பிரஜையான ரவிகுமார் கோட்டபாயவை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டி தற்கொலை குண்டுதாரிக்கு முச்சக்கரவண்டியை கொள்வனவு செய்ய நிதி வழங்கியதான குற்றச்சாட்டில் ஐந்து வருட விசாரணையின் பின்னர் 2011ம் ஆண்டு விடுதலையானார்
21. 2008ம் ஆண்டு தை மாதம் நாடாளுமன்றஉறுப்பினர் தசநாயக முதியான்சலாகே தசநாகவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தமிழ் செழியன் என அழைக்கப்படும் சுந்தரம் சதீஸ்சிற்கு எதிராக நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்திலும். விசேட2008ம் ஆண்டு தை மாதம் நாடாளுமன்றஉறுப்பினர் தசநாயக முதியான்சலாகே தசநாகவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தமிழ் செழியன் என அழைக்கப்படும் சுந்தரம் சதீஸ்சிற்கு எதிராக நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்திலும். விசேட படையனி பொலிஸ் அத்தியட்சகர் உபுல் செனவிரத்வுக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக கண்டி நீதிமன்றிலும் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரியந்த தேசபிரியவிற்கு மரணத்தை புரிவதற்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகையில் சிறைச்சாலையில் 2015;ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கு ஆகியவற்றிலும் சட்டத்தரணியவர்களே ஆஜராகி இருந்தார்.

22. 2006இல் கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை தொடர்பான நீதவான் நீதிமன்ற வழக்கிலும் 2016இல் சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும் ஆஜராகினார்.
23. த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி ப.அரியநேத்திரன், ளு.கஜேந்திரன், சிவாஜிலிங்கம் ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் 2006ம் 2008ம் ஆண்டுகளில் ஜேர்மனியிலும் அவுஸ்திரேலியாவிலும் பொங்கு தமிழ் எழுச்சிப் பேரணியில் கூடியிருந்த புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஈழத்தைப் பெறப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் நடாத்தும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும்படி உரையாற்றியதாக பொலிஸ் மாஅதிபர் குற்றப்புலனாய்வுத்துறைக்கு முறைப்பாடு செய்ததையடுத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத் திறன் வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்ய உதவியது.

24. விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளுக்கு தெகிவளை சேலான் வங்கியில் உளவுப்பிரிவின் பொட்டுஅம்மானின் வேண்டுகோளுக்கு இணங்க வங்கிக் கணக்குகளை நிறந்து நிதிப்பறிமாற்றம் செய்ய உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் 2010ம் ஆண்டு கைது செய்யப்பட்ட தெகிவளை சேலான் வங்கி முகாமையாளர் 2012ம் ஆண்டு விடுதலையானார்.

25. மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் தாமோதரம் பிள்ளை சயந்தன் ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் தற்கொலை அங்கியையும் உடமையில் வைத்திருந்தமைக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக குற்றம்சாட்ப்பட்டு 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சயன்தனின் தாய்க்கும் மகளுக்கும் எதிராக கொழும்பு நீதிமன்றில்; தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரைணையின் பின்னர் 2012இல் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்

26. இலங்கை குடியரசின் இராணுவத்துடன் சேர்ந்து கடமையாற்றிய கருணா அணி உறுப்பினரான தங்கராஜா தப்பரமூர்த்தி, செங்குராஜா நல்லையா, குகராஜா, ராஜா ராசவேலி ஆகியோரை கொலை செய்வதற்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கியதாக 2010ம் ஆண்டு கைது செய்யப்பட்ட கணேஷரத்னம் சாந்ததேவன் யாழ் மாநகரசபை உறுப்பினர் முருகையா கோமகன் ஆகியோர் தமக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளிலிருந்தும் 2017ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்

27. சுவிஸ்லாந்தில் விடுதலைப் புலிகளின் முகவர்கள் சேகரித்த பணத்தை 2007ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு சட்டரீதியற்ற முறையில் நிதிப்பரிமாற்றல்-புரிந்ததாக 2010ம் ஆண்டு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சுவிஸ்; பிரஜையும் சுவிஸ் தாய்வீடு நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருனாகரன் விசாரணையின் பின் 2013ம் ஆண்டு விடுதலையானார்

28. 2007ம் வைகாசி மாதம் கொழும்பில் பஸ் வண்டிக்கு குண்டுத்தாக்குதல் நடாத்தி 3 இராணுவத்தினரும் 15 பொதுமக்களும் ; கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு 2007 ஆடி மாதம் கொம்பனித் தெரு குண்டுத்தாக்குதலில் இரண்டு பொலிசாரும் 10 பொது மக்களும் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணையில் பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிசாரினால் 2008ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த ராஜீவ்விற்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து ஆறு வருட விசாரணையின் பின்னர் 2014ம் ஆண்டு இரண்டு வழக்கிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.

29. புலனாய்வுத்துறை அதிகாரி சுனில் தாப்ரு தெகிவளை பொலிஸ் விடுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கு (2003- 2018)

30. பாகிஸ்தான் உயர்ஸ்;தானிகர் கொலை முயற்சி வழக்கில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராகிய பஷpர்அலி மொகமட் என்பவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி 2006 ம் ஆகஸ்ட் மாதம் 14 ஆந் திகதி நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் இராணுப் பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த ஏழு இராணுவ அதிகாரிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன் மேலும் பத்து பொதுமக்களுக்கு கடும் காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கனகரத்தினம் ஆதித்தன் மற்றும் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கனகரத்தினம் ஆதித்தனால் வழங்கப்பட்டதாக அரச சான்றாக மேல் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டு மேலதிக விசாரணை நடைபெறுகின்றது 2006 – 2020

31. கொழும்பு செட்டியார்த் தெரு நகைக்கடை உரிமையாளர் சிவானந்தம் கைதும் விடுதலையும் 2010: அவசரகால ஒழுங்கு விதியில் சில விதிகள் 2010ஆம் ஆண்டு மே மாதம் நீக்கப்பட்டன அவற்றில் முக்கியமான ஒருவிதி 23ஆம் விதியாகும் இந்தவிதியின்படி தனது மனையில் அல்லது தொழில் புரியுமிடத்தில் தங்கவைத்திருப்பவர்களின் முழு விபரத்தையும் பொலிசாருக்கு கொடுக்காமல் விடுமிடத்;து பிரதான குடியிருப்பாளர் ஒவ்வொருவரும் தவறொன்றிக்குக் குற்றவாளியாதல் வேண்டும் இந்த வழக்கு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாமையால் சிவானந்தம் விடுதலை செய்யப்பட்டார்
32. 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தமிழீழ விடுதலை கடற் புலிகளின் மகளிர் பிரிவின் ஒரு தலைவியாகப் பணியாற்றிய பகிரதி முருகேசு 1998ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் சுகவீனம் அடைந்திருந்த தனது தாயாரை பார்ப்பதற்காக இலங்கை வந்து மீண்டும் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்காக 2015ம் ஆண்டு பங்குனி மாதம் 2ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தனது ஒன்பது வயது மகளுடன் வந்திருந்த போது பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு 2016ம் ஆண்டு வைகாசி மாதம் விடுதலை செய்யப்பட்டார்

33. வத்தளை எலகந்தையில் அமைந்துள்ள மின்சார நிலையத்தைக் குண்டு வைத்துத் தகர்க்தெரிய சதித் திட்டம் தீட்டியதாகவும்; கொழும்புலிருந்து கட்டுநாயக செல்லும் புகையிரதத்தினை வெடி குண்டு வைத்துத் தகர்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகவும்; கடும்சேதம் விளைவிக்க கூடிய குண்டுகளை உடமையில் வைத்திருந்ததாகவும் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஜெயராம் இராமநாதனுக்கு எதிராக கொழும்பில் மூன்று குற்றச்சாட்டுகளும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகள் உட்பட ஏழு வழக்குகளில் இருந்தும் 2019ம் ஆண்டு விடுதலை

34. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சி மாவட்ட ஒழுங்கமைப்பாளரான வேலமாலிதன் செயலாளர் பொன்னம்பலம் லட்சுமி காந்தன் ஆகியோருக்கு எதிராக வெடிபொருட்கள் ஆபாச பொருட்கள் மற்றும் ஆணுறைகளை மாவட்டக்கிளைக் காரியாலயத்தில் வைத்திருந்ததாக பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் 2013ம் ஆண்டு தைமாதம் 12ம் திகதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட வழக்கும் பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலையும்

35. இலங்கை தரைப்படையை சேர்ந்த மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கவையும் மேஜர் மஜீத்தையும் 2005ம் ஆண்டு குண்டுவைத்து கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 2006ம் ஆண்டு கைது செய்யப்பட்ட வாசுகோபாலுக்கு எதிராக சட்டமா அதிபரினால் 2009ம் ஆண்டு கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குக்களில் இருந்தும் 2017இல் விடுதலை செய்யப்பட்டார்

36. 2009 ஆண்டு சுதந்திர தின விழாவிலும் தியத்தலாவ இராணுவ முகாமிலும் மகிந்த ராஜபக்ஸ. கோட்டாபாய ராஜபக்ஸ சரத் பொன்சேகா ஆகிய பிரமுகர்களைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டி கொலைமுயற்சியில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரெத்தினத்தின் மகன் ஆதித்தியன் பத்தாண்டுகளின் பின் விடுதலை

37. 2005 ஓகஸ்;ட் மாதம் 12ஆம் திகதி இரவு சுமார் 10.45 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் 2005ஆம் ஆண்டு கைதுசெய்யபக்பட்ட சிதோர் ஆரோக்கியநாதன் பதின்மூன்று வருடங்களின் பின்னர் நீதிமன்றால் 2018ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். முழு நாடும் பரபரப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக நிறுவ முடியாமல் சட்டமாஅதிபர் திணைக்களத்தை திணரச் செய்யும் கேள்விகளைத் தொடுத்த சட்டத்தரணி தவராசாவின் நெஞ்சுரத்தை வெளிப்படையாகப் பார்க்கச் செய்ததும் இந்த வழக்குத்தான்.

38. 2018ஆண்டு ஆடி மாதம் 2ம் திகதி யாழப்;பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்ற அரச வைபவத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தண்டணைச் சட்டக்கோவை 120 பிரிவின் படி தண்டணை வழங்கக் கூடிய குற்றத்தை புரிந்துள்ளார் என பொலிசாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் அன்றைய தினமே பிணையில் விடுதலையும்

39. 2008இல் ஐந்து மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டு திருகோணமலையில் அமைந்துள்ள சித்திரவதை முகாமில் தடுத்து வைத்து கப்பம் கோரப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணையில் திருகோணமலையில் அமைந்துள்ள சித்திரவதை முகாமும் முல்லைதீவில் இயங்;கிய கோட்டபாய சித்திரவதை முகாமும் முதன் முதலாக வெளிக்கொண்டுவரப்பட்டதுடன்; மேல் நீதிமன்றத்தில் தற்பொழுதும் இவ்வழக்கு ரையல்-அட்-பார் முறையில் இடம்பெற்று வருகின்றது.

இந்த வழக்கு இப்போதும் மிகுந்த அவதானத்தைப் பெற்று இருக்கின்ற ஒன்றாகும். ஏனெனில் பல்வேறு உயர் அதிகாரிகளை நீதிக்கு முன் கொண்டுவந்து நிறுத்துவதில் இந்த வழக்கின் செல்வாக்கு அதிகம் எனலாம். அத்துடன் பல்வேறு மர்மங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் வித்தையையும் இந்த வழக்கினூடாகவே ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா செய்து காட்டியிருப்பார்.

40. கொள்ளுபிடிய பித்தளை சந்தியில் 2006ம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய கொலைமுயற்சி வழக்கில் புற்றுநோயாளியான சந்திரபோஸ் செல்வச்சந்திரன் 12 வருட விசாரணையின் பின்னர் விடுதலை 2006-2019

நான்கு தசாப்தங்களாக பயங்கரவாதத் தடைச்சட்டம், மற்றும் அவசரகால ஒழுங்கு விதிகளின்; கீழ் தமது மக்களுக்கான போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த இளைஞர்கள், யுவதிகள் மட்டுமின்றி வைத்தியர்கள், பொறியியலாளர், உதவி அரசாங்க அதிபர், ஊடகவியலாளர்கள், கோவில் தர்மகர்த்தாக்கள், கோவில் குருக்கள், அருட் தந்தைகள்;, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர், மாவட்ட அமைப்பாளர், மாநகரசபை உறுப்பினர், பல்கலைக்கழக மாணவர்கள், அரச சார்பற்ற அமைப்பின் அதிகாரிகள், சுங்க திணைக்களத்தின் உயரதிகாரிகள், ஆசிரியர்கள்;;, கிராம சேவையாளர்கள், தொழில் அதிபர்கள் புலம்பெயர் தமிழர்கள், வங்கி முகாமையாளர், எனச் சமூகத்தின் பல தரப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சட்டமா அதிபரினால் நாட்டிலுள்ள பல மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தனது மக்களின் மீது பற்றுக் கொண்ட ஒருவனின் குரல் எப்படியிருக்கும் என்பதற்கு தவராசா மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றார். தலைமைத்துவப் பண்பும் அன்பும் கனிவும் கொண்ட அவரது ஓர்மமிக்க குரல் நிச்சயமாக மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். தமிழ் மக்கள் தங்களின் குரலை உயர்த்த வேண்டிய முக்கியமான இடமாகப் பாராளுமன்றமே இருக்கின்றது. அங்கு ஒலிக்க வேண்டிய குரலை காலம் எமக்கு அடையாளம் காட்டித் தந்திருக்கின்றது. அதைச் சரியாகப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டியதுதான் புத்திசாலித்தனமிக்க மக்களின் கெட்டடித்தனமாகும்.