இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்துக்குள் ஊடுருவிய ஒருவர் கைது!
மத்திய உளவுத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் மெரைன் போலீசார்; ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தனுஸ்கோடி அருகே கம்பிபாடு என்ற இடத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரனை செய்தனர். விசாரனையில் அவர் திருச்சி பகுதியை சேர்ந்த முகமது உசைன் மொய்தீன் காதர்(68) என்பது தெரிய வந்தது இவர் கடந்த வருடம் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் ஜவுளி வியாபாhரம் செய்வதற்காக சென்றுள்ளார்.
இலங்கை மன்னாரில் உள்ள ஒரு பகுதியில் தங்கி வியாபாரம் செய்துள்ளார் அப்போது கொரோனா நோய் தொற்று காரணமாக இலங்கையில் இருந்து விமான சேவை நிறுத்தப்பட்டதால் அங்கிருந்து தமிழகம் வர முடியாமல் தவித்து வந்துள்ளார். பின்னர் சட்டவிரோதமாக மன்னாரில் உள்ள மீன் பிடி படகு மூலம் தனுஸ்கோடி வந்துள்ளார்.இவரை அழைத்து வந்த இலங்கை படகு இவரை இறக்கிவிட்டு விட்டு சென்றது. இவர் இங்கிருந்து தனது சொந்த ஊரான திருச்சி செல்ல கடற்கரை வழியாக நடந்து ராமேஸ்வரம் வந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மெரைன் போலீசாரிடம் சிக்கினார். பின்னர் செய்து ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைது செய்யப்பட்ட உசைன் மொய்தீன் காதர்யிடம் மெரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ் நடத்திய விசாரணையில் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கள்ளதோணியில் தனுஸ்கோடி அழைத்து வருவதற்;கு படகு ஓட்டியிடம் இலங்கை பணம் ஒரு லட்சம் கொடுத்ததாக தெரிவித்தார்.இவரை அழைத்து வந்த மன்னாரை சேர்ந்த நபர் போலீசாரை கண்டதும் அருகில் உள்ள தீவுகளில் மறைந்துள்ளாரா அல்லது சர்வதே கடல் வழியாக இலங்கைக்கு தப்பி சென்றுவிட்டாரா என தனுஸ்கோடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படையினர் தேடி வருகின்றனர்.