November 22, 2024

தமிழரசு மகளிரணி ஆண்கள் அணியாகவே உள்ளது:சசிகலா?

தமிழரசுக்கட்சியின் மகளிரணி தேர்தலில் பெண் ஒரேயொரு பெண் வேட்பாளரான தனது வெற்றிக்காக ஒரு துரும்பினை கூட கிள்ளிப்போட தயாராக இல்லாதிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார் கூட்டடமைப்பின் ஒரேயொரு பெண் வேட்பாளரான சசிகலா ரவிராஜ்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்.மாவட்ட வேட்பாளர் திருமதி சசிகலா        ரவிராஜின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்.ஊடக அமையத்தில் இன்று    இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட பெண் என்ற வகையில் நான் நேரடியாக சந்திக்கின்ற ஒவ்வொரு பெண்ணினதும் அவலங்களை சந்தித்து தற்போது கனத்த மனநிலையில் இருக்கின்றேன்.
முதலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். நானும் ஒரு பாதிக்கப்பட்ட பெண். ஆனால் எனக்கு பொருளாதார பிரச்சினைகள் கஇருந்திருக்கவில்லை.ஆனாலும் நான் சந்திக்கின்ற பெணகள் தமது அடுத்த வேளை உணவிற்காக கூலி வேலைக்கேனும் செல்லவேண்டியவர்களாக உள்ளனர்.
நான் செல்கின்ற இடமெல்லாம் எனது கணவரின் நினைவு மற்றும் அவருக்குரிய கௌரவத்தை மக்கள் இன்றும் தந்துகொண்டிருக்கிறார்கள்.மகளிர் அணிக்கிடையில் கருத்து முரண்பாடு காணப்படுவதை அனைவரும் அறிந்ததே.இருந்தாலும் அவர்களில் சிலர் என்னோடு தொடர்புகொண்டு எனக்கு ஆதரவு தந்துகொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
இதனிடையே மகளிரணி தலைவி மதனி சுமந்திரனை ஆதரிக்குமாறு அழுத்தங்களை தந்ததாக எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் பெண் என்ற வகையில் எங்களை நிர்பந்திக்க யாருக்கும் இடம்கொடுக்க மாட்டேன். நான் கட்சிக்கு விசுவாசமாகவும் அதற்கு கட்டுப்பட்டுமே இருக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார்.
இதனிடையே எனது கணவரது மறைவால் குடும்பமே ஆடிப்போயிருந்தது.அப்போது என்னிடம் அரசியல் அபிலாசைகள் இருந்த போதும் முதலில் நல்லதொரு தாயாக இருக்கவிரும்பினேன்.அதனாலேயே ஆரம்பத்தில் உடனடியாகவே என்னால் அரசியலில் ஈடுபடமுடியவில்லை.2015 இற்கு பின்னர் அதை நினைத்துபார்த்ததேன். இப்போது அதற்கான சாதகம் இருக்கிறது என நினைத்தேன். எனது கணவரின் பணியைத் தொடர வந்துள்ளேன் என்றார்.
இதனிடையே கனடாவிலிருந்து வந்த பண முறைகேடு பற்றி கேள்வி எழுப்பிய போது தான் அக்காலப்பகுதியில் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்காமையால் பதிலளிக்கமுடியுயாதுள்ளதாக சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.