சுவிசில் உதைபந்தாட்ட, மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டிகள்
26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்ட, மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டிகளானது 18.07.2020 அன்று பேர்ண் மாநிலத்தில் றுயமெனழசக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட இப் போட்டிகளானது பொதுச்சுடர், தேசியக்கொடியேற்றலுடன்;;, ஈகைச்சுடர், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.
தற்போதைய கொரோனாத் தொற்றின் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் சுவிஸ் அரசின் சுகாதரா விதிமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட விளையாட்டு ஆர்வலர்கள், பார்வையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். இச் சுற்றுப்போட்டியில் கழகங்களைச் சேர்ந்த போட்டியாளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழகங்கள், கழக வீரர்கள், கழகப் பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுற்றுப்போட்டி முடிவுகள் 18.07.2020