கலாநிதி குமாரவடிவேல் குருபரன் யாழ் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் இராஜினாமா
கலாநிதி குமாரவடிவேல் குருபரன் யாழ் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று( 17.07.2020) பல்கலைக்கழக தலைமை பீடத்திற்கு கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறை தலைவர் ஊடக அனுப்பி வைத்துள்ளார்.
தான் பதவி விலகுவதற்கான காரணமாக பல்கலைக்கழக பேரவை தன்னை சட்ட தொழிலில் ஈடுபடுவதிலிருந்து தடை செய்யதுள்ளமையை காரணம் காட்டியுள்ளார்.
தன்னால் உயிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்திற்கு எடுக்க படாமல் ஒத்திவைக்கப்பட்டு கொண்டிருக்க தான் இந்த விடயத்தில் இனியும் காத்திருப்பதில் பிரயோசனம் இல்லை என்றும் தொடர்ந்து தனது வாழ்வில் நிச்சயத்தன்மை இல்லாதிருக்க தான் அனுமதிக்க போவதில்லை என்று தனது இராஜினாமா கடிதத்தில் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
‚சட்டத் தொழிலில் ஈடுபடுவது கூடிய வருமானத்தை தரும் என்ற காரணத்திற்காக தான் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் அவ்வாறாக எடுப்பதாயின் தான் அதனை 2010யிலேயே அந்த முடிவை எடுத்திருந்துப்பேன் என்றும், வகுப்பறையில் மட்டும் முடங்கியிருக்கும் ஆசிரியராக கடமையாற்ற தான் தயாரில்லை என்றும் குருபரன் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிடுகிறார்‘.
‚தன் மீது விதிக்கப்பட்ட தடை பல்கலைக்கழகம் சுயாதீனத்தை முழுவதுமாக இழந்துவிட்டதுக்கான முக்கியமான சான்று என்றும் தனது நலன்கள் தொடர்பில் சுயமாக முடிவு எடுக்க முடியாத பல்கலைக்கழகம் யாருக்காக செயற்படுகின்றது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்‘.
‚நல்லாட்சி, சட்டத்தின் பாலான ஆளுகை, சுயாதீனம் ஆகியவற்றை தொலைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நல்லாசிரியர்களை ஈர்க்கவும் முடியாமல் தொடர்ந்து வைத்திருக்கவும் முடியாமல் நலிவடைந்து கொண்டிருப்பதாக குருபரன் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்‘