November 22, 2024

புலமைப்பரிசில் திட்டமிட்ட படி

புலமைப்பரிசில் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கபட்டபடி செப்ரெம்பர் 13 ஆம் திகதி நடத்தப்படும். எனினும் உயர்தர பரீட்சைகளை செப்ரெம்பர் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த திகதியில் மாற்றம் ஏற்படக் கூடும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –கடந்த மூன்று மாத காலமாக ஊரடங்கு சட்டம் , வைரஸ் பரவல் என்பவற்றின் காரணமாக கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. அதனைக் கருத்திக் கொண்டு மாணவர்களின் நலன்கருதி கல்விப் பொதுத்தராதர பரீட்சை , ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை என்பன செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டன.
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அந்த பரீட்சைகளை நடத்துவதற்கு சுமார் 5 மாத காலம் காணப்படுகிறது. எனவே அது பற்றி சற்று காலம் தாழ்த்தி தீர்மானிக்கப்படும். புலமைப்பரிசில் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி செப்ரெம்பர் 13 ஆம் திகதி நடத்தப்படவிருக்கிறது.
எனினும் உயர்தர பரீட்சைகளை செப்ரெம்பர் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த திகதியில் மாற்றம் ஏற்படக் கூடும். இவை பற்றி எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. தற்போதைய நிலைமை வழமைக்குத் திரும்பிய பின்னர் இது குறித்து ஆராயப்படும் என்றார்.