November 22, 2024

அமெரிக்கக் கடற்படையின் முதல் கறுப்பினத்தைச் சேர்ந்த வானோடி!!

அமெரிக்க கடற்படையில் போர் வானூர்தியை இயக்கும் வானோடியாக வரலாற்றில் முதல் முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேட்லைன் ஸ்வெகிள் என்ற அந்தபெண் அமெரிக்க கடற்படை வான்படைப் பள்ளியில் தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்து வானோடியாக வந்துள்ளார்.
அவர் இந்த மாத இறுதியில் “தங்கத்தின் சிறகுகள்“ என்று அழைக்கப்படும் வானூர்த்தி அதிகாரி அடையாளத்தை பெற இருக்கிறார்.
வர்ஜீனியா மாகாணம் பர்க் நகரைச் சேர்ந்த மேட்லைன் ஸ்வெகிள் கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்க கடற்படை அகாடமியில் பட்டம் பெற்றார்.
அதனை தொடர்ந்து 3 ஆண்டு கால தீவிர பயிற்சிக்குப் பிறகு தற்போது அவர் போர் வானூர்த்தியின் வானோடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.