சலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்!
யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , பேராசிரியர் மோகனதாஸ் , பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் சலாம் போட்ட விவகாரம் சூடுபிடித்துள்ளது.
தங்களை புத்திஜீவிகள் என சொல்லிக்கொள்ளும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு முன்னால்; கை கட்டி மௌனமாக அவர்கள் அமர்ந்து இருந்தமை நெட்டிசன்களிடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.
அறிவியியல் ரீதியாக ஒரு சமூகத்தை வழிநடத்த வேண்டிய சமூக பொறுப்பை ஆற்ற வேண்டிய பேராசிரியர்கள் பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் கீழ்த்தரமான அரசியல்வாதிகள் ,கொலைகாரர்களுக்கு முன்னால் கை கட்டி அமர்ந்து இருப்பதை பார்க்கும் பொது வேதனையாக இருக்கிறது.
பல்கலை கழகம் ஒன்றின் உயர் சபையான பேரவை கூட்டம் டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்தில் கூட்டப்பட்ட அவலத்திற்கு எங்கள் பேராசிரியர்களின் பதவி வெறி தான் காரணம் என்பதை இவர்களால் மறுக்க முடியுமா ?
இந்த பேராசிரியர்களின் பலவீனங்கள் வாகன அனுமதி பாத்திரம் இல்லாதவன் வாகன சாரதியாக யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் நியமிக்கப்பட காரணமாக அமைந்தது தனது வாழ்க்கையில் கணணியை கண்டு இருக்காதவன் கூட கணனி அலுவலகராக நியமிக்கப்பட்ட கொடுமை எல்லாம் கடந்த காலங்களில் நடக்க காரணமாக இருந்தது
எங்கள் பேராசிரியர்களுக்கு எது பற்றியும் கவலை கிடையாது . எதோ ஒரு வழியில் பதவி பெற வேண்டும் என்பதை மட்டும் இலக்காக வைத்து இருக்கிறார்கள் எனவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நல்லூரிலுள்ள விடுதியொன்றிற்கு தொலைபேசி வழி அழைக்கப்பட்ட சந்திப்பில் முன்னாள் மற்றும் இந்நாள் துணைவேந்தர்கள் சலாம் அடித்தமை சக கல்வியியலாளர்களிடையேயும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.