November 22, 2024

இலங்கை LOCKDOWN செய்யப்படுமா? இராணுவ தளபதி இன்று வெளியிட்ட தகவல்

இலங்கையை முழுமையாக மூட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்துக்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கிருந்த அனைத்து கொரோனா நோயாளர்களும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், நோய் அறிகுறிகள் கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக சிகிச்சை வழங்குவதற்காக புலனாய்வு பிரிவினர் 24 மணித்தியாலங்களும் தயார் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமையின் கீழ் கந்தகாடு கொரோனா கொத்து முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளமையினால் நாட்டை மூட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் மேலும் சில நோயாளிகள் அடையாளம் காணப்பட வாய்ப்புகள் உள்ளமையினால் மேற்கொள்ள வேண்டிய அனைத்து செயற்பாடுளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கந்தகாடு கொரோனா கொத்து தொடர்பில் ஊடகத்திற்கு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.