November 22, 2024

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தீர்வு பெற்றுத் தரமுடியும்: சிறீதரன் சீற்றம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கத்தின் துணை அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தமிழர் தாயக பகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் சில கட்சி 2009 காலப் பகுதியின் பின்னர் தொடர்ந்து பலமான தமிழ் தேசியத்தின் சிந்தனையுடன் பயணம் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிக்க வேண்டும் என்று பல வகையான எதிர்ப்பு அரசியல் செய்வது பலரும் அறிந்த விடயம்.

தமிழினம் விழிப்பாக இருங்கள் தமிழர் சுதந்திரமாக உரிமைகளோடு வாழ வேண்டிய வழிமுறைகள் மேற்கொள்ள தமிழ் தேசியத்தின் வழி உருவாக்கம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரியுங்கள்.

எந்த பிரதேசத்தில் இருந்து எந்த தமிழர், தமிழர் தாயக பகுதிகளில் அரசியல் செய்யலாம் அது தமிழ் தேசியத்தின் வழி உருவாக்கம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதாக இருக்க வேண்டும்.

மாறாக தமிழ் தேசியத்தின் வழி உருவாக்கம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்து அரச கட்சிகளையும் அரச கைக்கூலிகளின் கட்சிகளையும் தமிழர் தாயக பகுதிகளில் தமிழ் இனத்திடம் திணிப்பதனை ஒரு போதும் ஏற்க முடியாது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழினம் விழிப்பாக இருங்கள் திட்டமிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிக்க அரசு மட்டுமல்ல எம்வர்களில் சிலரும் அரசின் எலும்புத் துண்டுகளுக்காக களம் இறக்கப்பட்டுள்ளார்கள்

வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பதன் மூலம் மட்டுமே தமிழர் சுதந்திரமாக வாழ வழி கிடைக்கும் தமிழினத்தின் உரிமைக்காக எவ்வளவோ அற்பணிப்புகளை தமிழினம் செய்துள்ளது. தாங்க முடியாத அவலங்களை அனுபவித்தும் உள்ளது இப்போது பல அரசியல் கட்சிகள் உருவாக்கி தான் தலைமை, தனது கட்சி என்ற சுயநல நோக்கத்தில் தமிழினத்தின் ஒற்றுமை சிதைக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயக பகுதிகளில் நிரந்தர தீர்வு அமைதி நிலை உருவாக பல தடைகள் உருவாகி உள்ளது

தமிழினம் ஒற்றுமையாக இணைந்து சர்வதேசத்திற்கு தங்கள் தேவைகளை கூற வேண்டிய அவசியம் உள்ளது. தமிழர் தாயக பகுதிகளில் பிறந்து வளர்ந்த அனைவரும் சிங்களவர்கள் தந்த அல்லல்களை மறந்துவிடவும் முடியாது. அனுபவ ரீதியாக நினைத்து பார்க்கவும் முடியாது இலங்கையில் வாழும் எந்த தமிழனாலும் பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கவும் முடியாது தமிழினத்தின் தேவைகள் தொடர்பில் சிந்திக்க முடியாது.

எனவே தமிழர் தாயக தேசமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களில் எம்மவர்களது வலிகளை கண்டு குரல் கொடுத்துவரும் கூட்டமைப்பு என்கின்ற அரசியல் கட்சியால் மட்டுமே தமிழினத்திற்கான விரைவான நீதியை அரசியல் அபிலாஷைகளை பெற உழைக்கமுடியும் பெற்றுத்தர முடியும் ஏனெனில் தமிழினம் பட்ட வேதனைகளை கூடி பயணித்து அனுபவித்தவர்கள் நாங்கள் அதுமட்டுமே.

அது மட்டுமல்ல சிலர், எமக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் போதும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் போதும் என மக்களிடம் கேட்டு திரிகிறார்கள். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் நாடாளுமன்றம் சென்று என்ன செய்ய முடியும் தனது வயிற்றையும் நிரப்பி ஆடம்பரமாக வாழமுடியும்.

ஆனால் நாங்கள் கேட்கின்றோம் 20 இற்கும் குறையாதா நாடாளுமன்ற உறுப்பினர்களை வடக்கு கிழக்கில் வெற்றி பெறச் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றம் அனுப்புங்கள் அப்போதுதான் நாடாளுமன்றில் தமிழர்களுக்காக பேரம் பேசும் சக்தியாக இருக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்