பிரான்சில் உள்துறை அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் போராட்டம்
பிரான்சில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை உள்துறை அமைச்சராக பிரஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் நியமித்ததைக் கண்டித்து ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பெண் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஆர்வலர்கள் பெருந்திரளில் திரண்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
போராட்டம் டிஜோனில் காலை ஆரம்பமாகியது. பின்னர் ஏனைய நகரங்களுக்கும் பரவியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான வாசகங்களையும் பதாதைகளையும் வைத்திருந்தர்.
பாரிஸ் சிட்டி ஹாலுக்கு முன்னால் போராட்டம் நடத்தியவர்கள் “எ ரேபிஸ்ட் இன் யுவர் பாத்” (A Rapist in Your Path) என்ற பாடலைப் பாடியும் நடனம் செய்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.