November 22, 2024

நுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்!

நுணலும் தன் வாயால் கெடும்.சிறீதரன் கள்ள வோட்டு போட்டாரா இல்லையாவென்பது தெரியர்து.ஆனாலும் அவர் தனது வாயால் அதனை ஏற்றுக்கொண்டிருப்பதால் சட்டம் தன் கடமையினை செய்யுமென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் மாரிமுத்து கணபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்  சட்டம் ஒவ்வொருவரிற்கும் ஒவ்வொன்றாக இருக்கமுடியாது.
கள்ளவோட்டு போட்டவர் சிங்களவரா அல்லது தமிழரா,முஸ்லீமாவென பார்த்து சட்டம் பாயமாட்டாது.
இதனால் சிறீதரன் தனது வாயால் சொன்னதற்கு அவர்தான் விளக்கம் வழங்கவேண்டும்.நுணலும் தன் வாயால் கெடுமென இதனையே சொல்வர்.
சிலர் ஒற்றுமை ஒற்றுமையென பிதற்ற தொடங்கிவிட்டனர்.தேர்தல்கள் வந்தால் அவர்களிற்கு அது ஞாபகம் வருகின்றது.
கடந்த பத்து வருடங்களாக ஒற்றுமையாக இருந்து கூட்டமைப்பு என்னத்தை கிழித்ததென ஒற்றுமை பற்றி பேசுபவர்கள் சொல்லவேண்டும்.
கூட்டமைப்பினை தேசிய தலைவர் உருவாக்குகையில் புளொட் அமைப்பினை இணைக்க அனுமதிக்கவில்லை.அவர்கள் குணம் அவருக்கு தெரிந்திருந்தது.
இப்போது வியாழேந்திரன் ஓடிவிட்டார்.அப்போது தலைவர் ஏன் புளொட்டினை உள்ளடக்க வேண்டாமென்றது தெளிவாக தெரிகின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவருடன் ஊடக சந்திப்பில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களை சேர்ந்தவர்களும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.