மயிர் ராஜாவையே தூக்கியடித்த சுமா?
இந்தியாவின் தமிழகத்தில் தன்பாட்டிற்கு முகநூலில் அல்லது ருவிற்றரில் ஏதாவது தகவலை வெளியிடுவதும் அதற்கு எதிர்ப்பு வந்ததும் அட்மின் தவறென தப்பித்துக்கொள்பவர் எச்ச.ராஜா.பாரதீய ஜனதாக்கட்சி பிரபலமான அவரையே தூக்கியடித்திருக்கிறார் எம். ஏ. சுமந்திரன் .
நேற்று செம்பியன்பற்று மக்களைச் சந்தித்துப் பேசிய போது கோத்தா அரசில் அமைச்சு பதவியை பேரம் பேசி பெற தமிழ் மக்களை வாக்களிக்க கோரிய அவர் அதனை இப்போது அட்மனி தவறென மறுதலித்துள்ளார்.
„1952 ஆம் ஆண்டின் பின்னரான அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் பெருவாரியாக தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்து வந்திருப்பது அவர்கள் அரசியல் உரிமைகளைச் சுவீகரிப்பதை, அபிவிருத்தியிலும் பார்க்க முதன்மையானதாக எண்ணியதையே பிரதிபலிக்கிறது.
எமது மக்கள் அரசியல் உரிமைகளை சுயாட்சி்யை நிறுவுவதன் மூலம் உறுதிப்படுத்தி விட்டு, அடுத்தகட்டமாக தமக்கான அபிவிருத்தியைத் தாமே செய்து கொள்ளவதைத் தான் விரும்பி வந்திருக்கிறார்கள்.
ஆனால் தற்போது இந்தச் சிந்தனையில் மக்கள் மத்தியில் மாற்றம் வந்திருப்பது நிதர்சனம். இனியும் எமது பிரதேச அபிவிருத்தி கிடப்பில் போடப்படக் கூடாது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாகத் துளிர்த்திருக்கிறது.
என்னோடு பேசும் பல இளைஞர்கள் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைக் கூட்டமைப்பு ஏன் எடுக்கக் கூடாது எனக் கேட்கிறார்கள். அமைச்சுப் பதவிகளை எடுத்து எம் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்கிறார்கள்.கூட்டமைப்பு கட்சியாக இது விடயத்தை ஆராய்கிறது. நல் முடிவு எட்டப்படும்.“ எனக் கூறினார் என தற்போது அவரது முகநூல் பதிவு மாற்றப்பட்டுள்ளது.