மலேசியாவுக்குள் நுழைந்த 4 சட்டவிரோத குடியேறிகள் கைது! ஒரு பெண் உடல் மீட்பு!
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக படகு மூலம் நுழைந்த 4 சட்டவிரோத குடியேறிகள் Tanjung Lompat பகுதி அருகே மலேசிய கடல்சார் அமலாக்க முகமை கைது செய்துள்ளது.
இப்படகில் வந்த படகோட்டி, படகு உதவியாளர் மற்றும் 4 பேர் உள்ளிட்ட அனைவரும் இந்தோனேசியர்கள் என Tanjung அமலாக்க முகமையின் இயக்குனர் Mohd Zulfadli Nayan தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்ததற்காக குடிவரவுச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் கீழ் இவர்களுக்கு 10,000 மலேசிய ரிங்கட்கள் வரை அபராதமும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டையும் வழங்கப்படக்கூடும்.
மற்றொரு சம்பவத்தில், மலேசிய கடல்சார் அமலாக்க முகமையிடம் இருந்து தப்ப முயன்ற படகிலிருந்து குதித்த ஒரு இந்தோனேசிய பெண்ணின் உடலை சிங்கப்பூர் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.
தாங்கள் தேடி வந்த கடலில் குதித்த மூன்று இந்தோனேசியர்களில் ஒரு இந்தோனேசியரின் உடல் இது என மலேசிய Johor மாநில இயக்குனர் அப்துல் ரஷித் தெரிவித்துள்ளார்.