März 28, 2025

மஹிந்த ராஜபக்ச மன்னாருக்கு விஜயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 14ஆம் திகதி மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் நடுக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள காற்றலை மின் உற்பத்தி நிலையத்தை நேரில் சென்று பார்வையிட பிரதமர் அங்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதேவேளை இந்த விஜயத்தின்போது எந்தவொரு கட்சிசார் அரசியல்வாதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டாம் என்ற கடும் நிபந்தனைகளை தேர்தல்கள் ஆணைக்குழு விதித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பிரதமரின் இந்த விஜயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரும் பங்குபற்றி கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.