சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!
அமெரிக்காவின் போர் கப்பல்கள் சீனாவின் தென் சீன கடல் எல்லையை சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளியே செல்ல முடியாத வகையில் முக்கியான மூன்று எல்லைகளில் சீனாவின் போர் கப்பல்கள், விமானங்களை அமெரிக்கா கடற்படை சுற்றி வளைத்துள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்கு சீனா இறங்கி வர வேண்டும் என்று அரசியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நாட்களில் தென் சீன கடல் பகுதியில் ஒரே நேரத்தில் இருநாட்டுப்படையும் போர் கப்பல்கள் மூலம் எதிர் திசையில் செய்த பயிற்சி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கடல் பகுதியை மொத்தமாக கைப்பற்றினால் ஆசியாவை ஆழலாம் என்று சீனா நினைக்கிறது.
இதனை கட்டுப்படுத்த தற்போது அமெரிக்கா தென் கடல் எல்லையில் இருக்கும் சர்வதேச கடல் பரப்புக்கு அமெரிக்கா படைகளை அனுப்பியுள்ளது. இதற்கு எதிராக சீனாவும் எதிர் திசையில் படைகளை குவித்துள்ளது.
இதனால் தென் சீனா கடல் எல்லையில் போருக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.