März 28, 2025

வலிகாமம் கிழக்கில் சடலங்கள்?

வலிகாமம் கிழக்கின் ஆவரங்காலில் கிணற்றினுள் 28 வயதுடைய இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அவரது மரணம் தொடர்பிலோ அதனது பின்னணி தொடர்பிலோ தகவல்கள் வெளியாகவில்லை.
இதனிடையே நீர்வேலி பகுதியில் இன்று (5) காலை ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று காலை நீர்வேலி வடக்கு பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. முதியவர் ஒருவரே கொல்லப்பட்டார். கொலையை செய்தவர் கைதாகியுள்ளார்.