März 28, 2025

அமெரிக்காவில் விமான விபத்து: பயணித்த அனைவரும் பலி!

அமெரிக்காவின் உட்டா மாகாணம் ஆல்பைன் நகரில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் பாக்ஸ் எல்டர் மலையின் மீது விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு மலையில் இருந்து 4 பேரின் உடல்களையும் மீட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உட்டா மாகாணம் ஆல்பைன் நகரில் உள்ள பாக்ஸ் எல்டர் என்ற மிகப்பெரிய மலை 11 ஆயிரத்து 100 அடி உயரமுடையது குறிப்பிடத்தக்கது.