இலங்கை பொலிஸில் தரகர்கள்:கமல்!
போதைப் பொருள் வியாபாரம், கப்பம் பெறல், பாதாள உலக செயற்பாடு, மரம் வெட்டுதல், விபச்சார விடுதி, மணல் அகழ்வு உட்பட ஏனைய சட்டவிரோத குற்றச் செயல்கள் பாரிய அளவில் இடம்பெறுமாயின் அது அந்தந்த மாகாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் தாம் சீருடை அணிவதில் வெட்கப்பட வேண்டும் என இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
தாம் சேவையாற்றும் பிரதேசத்தில் காணப்படும் எந்தவொரு அழுத்தங்களுக்கு அடிப்பணியாது, தமது சீருடையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் சட்டவிரோத செயற்பாடுகள் பாரிய அளவில் இடம்பெறுவதற்கு இடமளிக்க வேண்டாம்.
இங்கு இடம்பெறும் தவறுகளினால் அந்தந்த மாகாணங்களில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடக்கம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வரையான சகல பொலிஸ் அதிகாரிகளும் பொறுப்புக் கூறலிலிருந்து நழுவ முடியாது மாறாக குறித்த மாகாணங்களில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கான பொறுப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே காவல்துறைக்கும் இராணுவத்திற்குமிடையிலான முறுகல் உச்சமடைந்துள்ள நிலையில் இக்கருத்து வெளியாகியுள்ளது.