November 22, 2024

துணைக்குழுக்களிற்கு அஞ்சியே வெளியேறினர்?

டக்ளஸின் ஈபிடிபி , புளொட் கருணா, பிள்ளையான் குழு போன்ற ஆயுதக்குழுக்களின் கொலை அச்சுறுத்தலாலேயே நாட்டை விட்டு எம்பிகள் வெளியேற வேண்டி ஏற்பட்டது.போர்நடந்த காலப்பகுதியில் கஜேந்திரகுமார் இலங்கையில் இல்லை என ஈபிடிபி கூறுவது பொய் .அவர் இலங்கையிலேயே இருந்தார் என தெரிவித்துள்ளார் சட்டத்தரணி மணிவண்ணன்.
போரில் சிக்கியிருந்த மக்களையும் போரின் இறுதிக்கட்டத்தில் சர்வதேச பங்களிப்புடன் புலிகளை பாதுகாப்பாக வெளியே எடுப்பது தொடர்பிலும் தன்னாலான முயற்சிகளை அவர் எடுத்திருந்தார். துரதிஸ்டவசமாக அதில் அவர் வெற்றிபெறமுடியவில்லை. ஆனால் இந்த சம்பவங்கள் பற்றிய விரிவான சாட்சியங்களை அவர் சர்வதேச மட்டத்தில் வழங்கி இருக்கிறார எனவும் அண்மையில் யாழ்.ஊடக அமையத்தில் சட்டத்தரணி ரெமீடியஸ் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் அப்போது கொழும்பில் இருந்தவண்ணம் புலிகளின் பணிப்பின் பேரில் பல்வேறு ராஜந்ததிர முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தார் என்பதை அமெரிக்க எம்பசின் விக்கிலீல்ஸ் கேபிள்கள் வெளிப்படுத்தியிருந்தது .
இதனிடையே டக்ளஸ் தேவானந்தா போன்ற மக்கள் சேவை செய்யக் கூடியவர்களைத் தமிழ் மக்கள் தெரிவுசெய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதனூடாகவே பாரிய அபிவிருத்தி களை வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் அனுபவிக்க முடியும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிததுள்ளார்.தமிழ் ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் போன்றவர்கள், தம் அரசியல் இருப்புக்காக வாய்ப் பேச்சுகளால் மாத்திரம் அரசியல் செய்கின்றார்கள் எனவும், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் மக்களுக்காகச் சேவை செய்கின்றார்கள் என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.