Mai 12, 2025

சுவாசக் கவசத்தில் தோன்றிய முன்னாள் முதலமைச்சர்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவாசக் கவசங்கள் பிரச்சார கூட்டங்களின் போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் இந்த சுவாசக்கவசங்கள் கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரச்சார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் வித்தியாசமான பிரச்சார உத்திகளை கடைப்பிடித்து வருகின்றன.