தபால் மூல வாக்களிப்பு இம்முறை 5 நாட்கள்?
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்பு இம்முறை மூன்று கட்டங்களாக நடக்கவுள்ளது.
இதன் பிரகாரம் கொரோனா கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிருக்கு எதிர்வரும் 13ம் திகதியும்,14மற்றும் 15ம் திகதிகள் ஏனைய அரச அலுவலகங்களிற்கும், 16மற்றும் 17ம் திகதிகள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படைகள்,காவல்துறைக்கும் வாக்களிப்பு நடக்கவுள்ளது.
கோரொனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டே மூன்று கட்டமாக தேர்தல் தபால் மூல வாக்களிப்பு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இம்முறை வாக்களிப்பின் போது விருப்பு வாக்குகளை தனி ஒரு நபருக்கு ,இருவருக்கு மற்றும் மூவருக்கு வழங்க ஏற்பாடாகியுள்ளதுடன் வாக்குசீட்டும் அவ்வாறே அச்சிடப்பட்டுமுள்ளது குறிப்பிடத்தக்கது.