இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான உறவில் பாதிப்பு? காரணம் என்ன தெரியுமா ??
கடன்களை செலுத்தும் காலத்தை நீடித்துத்தருமாறு இந்தியாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகக்கு நான்கு மாதங்களாகியும் பதில் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்திய பிரதமரிடம் குறித்த கோரிக்கையை நேரடியாக விடுத்திருந்தார்.
எனினும் கடன்களை மீளச்செலுத்துவதற்காக காலத்தை நீடிக்கும் கோரிக்கைக்கு இன்னும் உரிய காரணத்தை இலங்கை தெரிவிக்கவில்லை.
அத்துடன் ‘பேச்சுவார்த்தையை எப்போது நடத்துவது என்பது குறித்து இலங்கை தரப்பு இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் ஒரு இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுக்கு சீன ஜனாதிபதி முன்னதாகவே இதற்கான உறுதிமொழியை கோட்டாபய ராஜபக்சவிடம் வழங்கியிருக்கிறார்.
இந்தியா – சீனாவுக்கு இடையில் மோதல் உருவாகி உன்னதால் இது மீண்டும் இந்தியா, இலங்கைக்கு எதிராக சிவப்புக்கொடியை காட்டுவதற்கு வழியே ஏற்படுத்திவிடும் என்று இந்திய நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.