November 21, 2024

பெருமைமிகு வழக்கறிஞர் திரு ராஜாசெந்தூர் பாண்டியன் அவர்கள் விகடனுக்கு அளித்த பேட்டி !!

சின்னம்மா அவர்கள் ஆகஸ்ட் 14-ம் தேதி விடுதலை ஆகப்போகிறார் என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி போட்ட ஒரு ட்வீட்டால் அரசியல் களம் அனல் பறந்துகொண்டிருக்கிறது என்பது பற்றி விகடன் எழுப்பிய கேள்விக்கு திரு RSP கொடுத்த பதில்..
நான் யூகத்திற்கெல்லாம் பதில் சொல்வதில்லை. முதலில் சட்டம் என்ன சொல்கிறது என்றால், எந்த ஒரு தண்டனைக் கைதி தண்டனைக் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தாண்டுகிறாரோ அப்போதே ரெமிசனுக்காக (தண்டனை குறைப்புச் சலுகை) தயார் ஆகிறார் அல்லது உரிமையாகிறார். இதன் அடிப்படையில் சசிகலாவிற்கு வழங்கப்பட்ட 4 வருடச் சிறைத் தண்டனையில் அதாவது 48 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது 32 மாதக் கால தண்டனையை அனுபவித்தாலே தண்டனைக் குறைப்பு சலுகைக்கு வந்துவிடுகிறார். அதன் அடிப்படையில் கடந்த வருடம் 2019 செப்டம்பரில் சிறைவாசிகளுக்குக் கிடைக்கக் கூடிய சலுகைகளைப் பெறக்கூடியவராகத் தகுதியாகிறார்.
இந்நிலையில் சசிகலா அவர்கள் சிறையில் நடந்துகொள்ளும் விதத்தின் அடிப்படையில் எஸ்.பி 30 நாள்கள், ஐ.ஜி 60 நாள்கள் வரை தண்டனை நாள் குறைப்பு வழங்கலாம். (இது ஸ்பெஷல் ரெமிசன்) இதனை அதிகாரிகள் வழங்கியிருந்தால் கடந்த டிசம்பர் மாதத்திலேயே சசிகலா அவர்கள் வெளியில் வந்திருப்பார். இச்சட்ட நுணுக்கத்தை வைத்துக்கொண்டுதான் அடுத்தடுத்த நகர்வுகளைச் செய்துகொண்டிருந்தேன். கொரோனா விவகாரத்திற்குப் பிறகு சசிகலாவைச் சந்திக்கமுடியவில்லை.
நாங்கள் நடத்திவரும் சட்டப்பணியைப் பார்த்துக்கூட ஆசீர்வாதம் ஆச்சார்ய அந்த ட்வீட் போட்டிருக்கலாம். அப்படி இல்லையென்றால் யூகத்தின் அடிப்படையில் கூட போட்டிருக்கலாம். அவர் ஏன் போட்டார் எதற்காகப் போட்டார் என்ற விவகாரத்திற்குச் செல்ல நான் விரும்பவில்லை. எல்லோரும் ஒன்றைச் சொல்கிறார்கள் இன்றுவரையிலும் அபராதத் தொகை கட்டவில்லை. அதனால் சசிகலா வெளியில் வருவது சிரமம் என்கிறார்கள். நான் கேட்கிறேன் அபராதத் தொகை கட்டுவதற்கு ஒரு நாள் ஆகுமா? இதையெல்லாம் ஒரு காரணமாகச் சொல்லாதீர்கள். சசிகலா கூடிய விரைவில் வெளியில் வருவார். அதில் எந்த மாற்றமுமில்லை” என முடிவுரை சொல்லி சின்னம்மாவின் வருகையை உறுதி செய்திருக்கிறார்..
காத்திருப்போம் தியாகத்தாயின் தரிசனத்திற்காக மக்கள் செல்வரின் தம்பிகளாய்…