November 21, 2024

மக்களுக்காக திருமணத்தை ஒத்திவைத்த பிரதமர்..!!

மக்களுக்காக திருமணத்தை ஒத்திவைத்த பிரதமர்..!!

கொரோனா நெருக்கடி தொடர்பான ஐரோப்பிய கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்சில் எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு பின் முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் நேரடியாக சந்தித்து கொரோனா நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதனிடையே டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தனது வருங்கால கணவரான போ டெங்பெர்க் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில்,

நான் இவரை தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். ஜூலை மாதம் 17 ஆம் திகதி எங்கள் திருமணத்திற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் நான் எனது வேலையைச் செய்ய வேண்டும் என்பதுடன் டென்மார்க்கின் நலன்களை பாதுகாக்க வேண்டும். போவுக்கு ‛ஆம்’ என்று சொல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை இடது சோசலிச ஜனநாயக கட்சியை சேர்ந்த 41 வயதாகும் மெட்டே பிரடெரிக்சன் கடந்தாண்டு டென்மார்க்கின் இளம் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் கிரீன்லாந்தை வாங்க விரும்பிய அமெரிக்க அதிபர் டிரம்பின் யோசனை மிகவும் ஆபத்தமானது என மெட்டே விமர்சித்ததை அடுத்து இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.