கூட்டமைப்பு வசமுள்ள மதுபானசாலைகள் விபரம் விரையில்?
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்ச கும்பல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெறாதிருக்கவாவது வடகிழக்கு தமிழ் மக்கள் பொதுஜனபெரமுன மற்றும் அதன் பங்காளி கட்சிகளை புறந்தள்ளி உரிய தரப்பிற்கு வாக்களிக்கவேண்டுமென ஜேவிபியின் தேசிய மக்கள் சக்தி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அக்கட்சி பிரமுகரான சந்திரசேகரன் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
இப்போது இலங்கை மக்களது மன எதிர்பார்ப்பு நாடாளுமன்றில் குண்டு வெடிக்காதா?கொரோனா வந்து அங்கு இருப்பவர்களை அள்ளிக்கொண்டு செல்லாதா என்பதாகத்தான் இருக்கின்றது.
அவ்வளவிற்கு மக்கள் நாடாளுமன்றம் மீதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சீற்றங்கொண்டுள்ளனர்.
உண்மையில் நாடாளுமன்றம் சென்றால் தங்கள் மடியை நிரப்பலாம்,குடும்பங்களிற்கு என்ன செய்யலாம்,எத்தனை மதுபான சாலை பெமிட்களை எடுக்கலாமென எதிர்பார்த்தே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகின்றனர்.
கூட்டமைப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடமுள்ள மதுபான சாலைகள் எத்தனை,பெற்றோல் செட்கள் எத்தனை என்பதை உரிய காலத்தில் வெளிப்படுத்துவேன் எனவும் சந்திரசேகரன் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே ஜனாதிபதியாக பொறுப்பேற்க முன்னர் கோத்தபாய புத்திஜீவிகளை கொண்ட ஆலோசனை சபையை நியமிக்க போவதாக கூறினார்.
ஆனால் கடைசியில் அமைச்சுக்கள் தொடங்கம் வீதி வரையாக படைகளையே அவர் நியமித்துள்ளதாகவும் சந்திரசேகரன் மேலும் தெரிவித்தார்.