März 28, 2025

பாதாள உலகக்குழு உறுப்பினர் சுட்டுக்கொலை! வெளியான தகவல்

கம்பஹா, மத்வத்து- ஹிரிப்பிட்டிய பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவை சேர்ந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கனேமுல்ல சஞ்சீவ குழுவை சேர்ந்த ரஞ்சோத் பெடிஜ் சஞ்சீவ சம்பத் அல்லது கெடவல்பிட்டிய கிரி சம்பத் என்பவரே கொல்லப்பட்டார். அவர் போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

அவரிடமிருந்து ரிவோல்வரும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.