சிறுவர்களை ஆட்சேர்த்த விவகாரத்தில் கருணாவை விசாரியுங்கள்: மிச்செல் பச்லெட் அம்மையார்…
குழந்தைப் போராளிகளை படைக்கு இணைத்த விவகாரத்தில் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) விசாரணைக்குட்படுத்த வேண்டுமென ஐ.நா மனத உரிமைகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் தனது ருவிற்றர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சட்டங்களின்படி பாரதூரமான குற்றமாக கருதப்படும் சிறுவர்களை கட்டாயமாக படைக்கு இணைக்கும் நடவடிக்கையில் கிழக்கில் கருணா ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அவரது கடந்த காலம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் இந்த சமயத்தில், கட்டாயமாக படைக்கு இணைத்தது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள யாரும் பொறுப்புக்கூறலில் இருந்த தப்பிக்கக்கூடாது என்றும் மனத உரிமைகள் பேரவை குறிப்பிட்டுள்ளது.