März 28, 2025

வசந்த கரன்னகொட பாஸ்?

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பிலும், புறநகர் பகுதிகளிலும் 11 இளைஞர்களைக் கடத்தி கொலை செய்த வழக்கில் முன்னாள் கடற்படை தளபதியும் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.
இதற்கு எதிராக அட்மிரல் வசந்த கரன்னகொட உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திரு்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்து, இறுதி தீர்ப்பு அளிக்கும் வரை, மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.