März 28, 2025

எனக்கு ரத்தம்: உனக்கு தக்காளி சட்னி?

வடகிழக்கில் ஊடகப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டவேளை வேடிக்கை பார்த்த தெற்கு தனக்கு நெருக்கடிகள் வந்துள்ள நிலையில் துள்ளி குதிக்கதொடங்கியுள்ளது.பத்திரிகையாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிசா பஸ்டியனை இலக்குவைப்பது அச்சுறுத்துவது துன்புறுத்துவதை இலங்கை அதிகாரிகள் உடனடியாக நிறுத்தவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு,எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு,சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,உட்படஐந்து அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனதரிசா பஸ்டியனிற்கு எதிரான நடவடிக்கைகள் மனித உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என குறிப்பிட்டுள்ள இந்த அமைப்புகள் தரிசா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்தி அவரது பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.