März 28, 2025

தம்பி என்றும் எனக்கு தம்பியே!

பிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன்.இனியும் அவ்வாறே அழைப்பேன் என்றார் சி.வி.விக்கினேஸ்வரன்.

யாழ்.ஊடக அமையத்தில் ,ன்று செவ்வாய் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சி.வி.விக்கினேஸ்வரன் நான் மாவீரர் துயிலுமில்லத்திற்கு எப்போது எத்தனை தடைவை சென்றேன் என்பது பொது வெளியில் சொல்லவேண்டியதல்ல.ஆனாலும் நான் பல தடவைகள் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளேன்.
புகைப்படம் பிடிக்க ஆட்களை வைத்து நான் மாவீரர் துயிலுமில்லம் செல்லவிரும்பியதுமில்லை.விரும்ப போவதுமில்லை.
ஆனாலும் அரசியல் பிழைப்பிற்காக எத்தகைய குற்றச்சாட்டுக்களையும் முன்வைப்பது வேறு.ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுக்களை வைத்து கேவல அரசியலினை செய்வது மன உழைச்சலையே தருவதாகவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.