Mai 12, 2025

ஒத்திகை! யாழில் எண்ணப்பட்டன வாக்குகள்!

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் ஒத்திகை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் ஒத்திகை ஆரம்பமானது. இதேவேளை, வாக்கெடுப்பு ஒத்திகை கடந்த வாரம் நாவந்துறை பாடசாலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
COVID-19  நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார அமைச்சின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பொதுத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணியை முன்னெடுப்பது பற்றி இந்த ஒத்திகை முன்னெடுக்கப்பட்டிருந்தது.