November 22, 2024

உச்சத்தில் கூட்டமைப்பு:தற்போதுவரை 3 அணிகள்?

எதிர்வரும் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்பு மூன்று வரையிலான ஆசனங்களையே பெறலாமென்ற நிலையில் குழு மோதல்கள் உச்சம் பெற்றுள்ளது.

சுமந்திரன்,சிறீதரன் ,சுரேந்திரன் மற்றும் தவேந்திரன் ஆகியோர் ஒரு அணியாகியுள்ளனர்.ஆயினும் தவேந்திரன் கறிவேப்பிலை என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
இன்னொரு புறம் மாவை சேனாதிராசா ,ஈ.சரவணபவன் மற்றொரு அணியாகியுள்ளனர்.
சித்தார்த்தன்,கஜதீபன் தரப்பு தனித்து ஓடிக்கொண்டிருக்கின்றது.
இதனிடையே சசிகலா ரவிராஜ்ஜினை சுமந்திரனின் பலியாடாக்க முயற்சிக்கப்பட்ட போதும் அவர் சுதாகரித்துக்கொண்டுள்ளார்.
சுமந்திரனிற்கான பலியாடாக அவர் மறுத்ததையடுத்து சயந்தன் தரப்புக்கள் அவரை வசைபாடத்தொடங்கியுள்ளன.
இதனிடையே தன்னை தீவிர புலி ஆதரவு செயற்பாட்டாளனாக காண்பித்துக்கொண்ட சிறீதரனின் நகர்வு பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.தனக்கு இலாபமின்றி செயற்பட மாட்டார்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள சிறீதரன் -சுமந்திரன் கூட்டு அனைத்து தரப்பினதும் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
இதனிடையே சுமந்திரனுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் மக்கள் என்னை தோற்கடிப்பார்களாக இருந்தால், அந்த வரலாற்று தோல்வியை ஏற்றுக்கொள்ள தயார் என சிறீதரன் அறிவித்துள்ளார்.
தென்மராட்சியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்களிற்கும், தொகுதி கிளை உறுப்பினர்களிற்குமிடையிலான சந்திப்பில் இதனை தெரிவித்திருந்தார்.
தொகுதி கிளை தலைவர் கே.சயந்தன் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
“சிலர் சொல்கிறார்கள்- ஏன் சுமந்திரனுடன் செல்கிறீர்கள்? அவருடன் சென்றால் உங்களிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என. சுமந்திரனுடன் இணைந்த பிரச்சாரம் செய்வதால் மக்கள் என்னை தோற்கடிப்பார்களாக இருந்தால், அந்த வரலாற்று தோல்வியை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறேன்“ என சிறிதரன் தெரிவித்துள்ளதாக சித்தார்த்தன் தரப்பு தகவல்களை கசியவிட்டுள்ளது.