ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கு கிழக்கு தொடர்ந்தும் இராணுவமயம்..!!
ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கு கிழக்கு தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே உள்ளது.
இவ்வாறு ஐநாவின் அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமைக்கான சுதந்திரம் குறித்த விசேட அறிக்கையாளர் கிளைமென்ட் யலெட்சோசி வியுல் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு தான் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளதாக விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது
இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் கண்காணிப்பு கட்டமைப்பு காணப்படுவதுடன் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு அப்பால் இது சுதந்திரமாக முன்னெடுக்கப்படுகின்றது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் இந்த கண்காணிப்பு தீவிரமாகியுள்ளது.
தனது விஜயத்தின் போது இலங்கையின் சிவில் சமூகத்தினரிடமிருந்து கிடைத்த கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகள் தன்னை பெரும் கரிசனை கொள்ளச்செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.