März 28, 2025

விற்றதற்கு விசாரணை?

கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில், இலங்கை அணி பணத்துக்காக விற்கப்பட்டதாக  அப்போதைய விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு  விளையாட்டுத்துறை அமைச்சின்  செயலாளர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.