November 22, 2024

இலங்கையில் இரு நாடுகளா?:கணேஸ் கேள்வி

தற்போது கொழும்பிலுள்ள ஆட்சியாளர்கள் வடகிழக்கையும் தெற்கையும் வேறு வேறு நாடுகளாகவே கருதுவதாக தெரிவித்துள்ளார் ஜக்கிய மக்கள் சக்தி அமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேஸ் வேலாயுதம்.
வவுனியாவிற்கு அப்பால் படையினர் நின்றிருந்தாலும் சோதனைகள் ஏதுமில்லை.ஆனால் வடக்கில் அமுல்படுத்தப்படும் கெடுபிடிகள் மற்றும் சோதனை சாவடிகள் இருவேறு நாடுகள் இருப்பதை உறுதிப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆயினும் சஜித் பிறேமதாசா ஆட்சி கதிரையேறிய பின்னர் அவ்வாறான நிலை ஏற்படாது.
இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் சமமாகவே கருதப்படுவர்.
அவ்வாறானதொரு  பாகுபாடு தமிழ் மக்களிற்கு பேச்சிற்கேனும் காண்பிக்கப்பட்டால் நான் கட்சியிலிருந்து விலகி விடுவேன் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
அதேவேளை கூட்டமைப்பு தலைவர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிக்காலத்தில் பெற்றுக்கொண்ட சலுகைகள் மற்றும் வாகன பெமிட்களை என்ன செய்தார்கள் என்பது தொடர்பில் பொதுமக்களிற்கு வெளிப்படுத்த தயாராவென சவால் விடுத்துள்ளார் கணேஸ் வேலாயுதம்.
ஜக்கிய மக்கள் சக்தி அமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேஸ் வேலாயுதம் இன்று வியாழக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அங்கு கருத்து வெளியிட்ட அவர் நான் நாடாளுமன்றிற்கு தெரிவானால் எனது மாதாந்த ஊதியம் உள்ளிட்ட கொடுப்பனவுகளையும் வாகன பெமிட் போன்ற வருமானத்தையும் எனக்கு பெற்றுக்கொள்ளப்போவதில்லை.அதனை பாதிக்கப்பட்ட மக்களிற்கே வழங்குவேன் எனவும் கணேஸ் வேலாயுதம் தெரிவித்தார்.
குறிப்பாக 300கோடி செலவில் அமைக்கப்பட்ட இரணைமடு நீர்விநியோகத்திட்டம் அதில் நடைபெற்ற மோசடிகைள மூடி மறைக்க சதிகள் நடக்கின்றன.சுன்னாகம் குடிநீரில் கழிவு ஓயில் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலும் மூடி மறைக்கப்படுகின்றது.
வுடமாகாணசபையில் நடை பெற்ற பாரிய ஊழலான நெல்சிப் ஊழல் ஏழு வருடங்கள் கடந்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இவை அனைத்துமே  சஜித் ஆட்சி கதிரையேறியதும் விசாரணைகளிற்கு எடுத்துக்கொள்ளப்படுமென மேலும் அவர் தெரிவித்தார்.
இத்தேர்தலில் ரணிலின் ஜக்கிய தேசியக்கட்சி பெரு வெற்றி பெறுமென நம்பவில்லை.ஆனால் சஜித் ஆட்சி பீடமேறுவது நிச்சயமெனவும் கணேஸ் வேலாயுதம் தெரிவித்தார்.