ரங்கராஜனின் இறுதிக்கிரியை இன்று!
முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சி. ரங்கராஜா நேற்று (15) காலமானார் .
இணைந்த வடகிழக்கு மாகாணசபையிலும் பின்னராக பிரிக்கப்பட்ட வடக்கு மாகாணசபையிலும் நெருக்கடிகள் மிகுந்த காலப்பகுதியில் அவர் பிரதம செயலாளராக பணியாற்றியிருந்தார்.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் பெரும் செயற்பாட்டாளர். தன்னலமற்ற சேவகர், மிகச் சிறந்த திட்டமிடலாளன் எனும் பெருமைக்குரியவரென அவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொன்னாலையினை சேர்ந்த அவரது இறுதிக்கிரியைகள் இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.
1978 – 80-உதவி அரசாங்க அதிபர், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை
1980 -உதவி அரசாங்க அதிபர், அம்பாறை மாவட்டச் செயலகம்
1981 – 82 -உதவித்திட்டப் பணிப்பாளர், வவுனியா
1983 – 86 -உதவித்திட்டப் பணிப்பாளர், மன்னார்
1986 – 88-செய்திட்ட பிரதிப்பணிப்பாளர் (IRDP), மன்னார் மாவட்டம்
1988 – 89 -செய்திட்டப் பணிப்பாளர் (IRDP), வவுனியா மாவட்டம்
1989 – 90-பிரதித் திட்டப்பணிப்பாளர், வவுனியா மாவட்டச் செயலகம்
1992 – 96-திட்டமிடற் பிரதிச் செயலாளர், வடக்கு, கிழக்கு மாகாணசபை (வ.கி.மா.ச.)
1996 – 2001-திட்டமிடற்பிரதித் தலைமைச் செயலாளர், வ.கி.மா.ச. திருகோணமலை
2001 – 2002-ஆளுநரின் செயலாளர்
2002 – 2006-தலைமைச் செயலாளர், வ.கி.மா.ச. திருகோணமலை
2007 – தலைமைச் செயலாளர்,வடமாகாண சபை