சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று! மூடப்பட்டன 7 சந்தைகள்
சீனாவில் மீண்டும் கொரேனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களில் பீஜிங்கில் மட்டு் 79 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஏற்பட்டுள்ளமை
கண்டறியப்பட்டுள்ளது.
பீஜிங்கை பொறுத்தவரை கடந்த சனவரியில் இருந்து தற்போது வரை மொத்தம் 499 பேர் உள்நாட்டில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருந்தார்கள். 174 பேர் வெளிநாட்டில் இருந்து நோய்த்தொற்றுடன் வந்தவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பீஜிங் நகரில் உள்ள புகழ்பெற்ற ஜின்பாடி சந்தையின் மீன் வெட்டும் பலகையில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டிறியப்பட்டுள்ளது.
அங்கிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதித்த போது இந்த உண்மை கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அந்த சந்தை உள்பட நகரில் உள்ள 7 சந்தைகள் மூடப்பட்டு உள்ளன.
வெளிநாட்டு மீன்களை வெட்டப் பயன்படுத்தப்படும் பலகைகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சீனா ஐரோப்பாவிலிருந்து சால்மன் மீன் இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது.
சீனாவில் அக்டோபர் தொடங்கும் குளிர்காலத்தில் கொரோனாவின் 2வது அலை தாக்கும் என கணித்திருந்த நிலையில் தற்போது அந்த நோய் பரவத்தொடங்கியுள்ளது.
இதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைத்து அரசு சுகாதார நிறுவனங்களும் ஜின்ஃபாடி உணவு சந்தைக்கு வருகை தந்த அல்லது அங்கு இருந்த எவருடனும் தொடர்பு கொண்டிருந்த ஊழியர்களை 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலை மேற்பார்வையிட உத்தரவிடப்பட்டது. சந்தை மூடப்பட்டது. அதைச் சுற்றியுள்ள பல குடியிருப்பு தோட்டங்கள் மூடப்பட்டுள்ளன. இப்பகுதியில் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.