நடிகர் மணிவண்ணணுக்கு மருமகளான ஈழத்து பெண்!
பிரபல நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த மணிவண்ணன் தனது இறுதி காலத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்தார்.
ஈழத்துக்கு ஆதரவான பல்வேறு போராட்டங்களில் மணிவண்ணன் பங்கேற்றிருக்கிறார்.
அந்த சமயத்தில் தனது பிள்ளையை ஈழப்பெண்ணுக்கு தான் திருமணம் செய்து வைப்பேன் என கூறினார். சொன்னதை செய்தும் காட்டினார் மணிவண்ணன்.
லண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணான அபி-க்கு தனது மகன் ரகுவண்ணணை திருமணம் பேசி முடித்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரகுவண்ணன் – அபி திருமண நிச்சயம் நடந்த நிலையில் ஜூன் மாதம் திருமணம் நடக்கவிருந்தது.