பைலட் இல்லாமல் சண்டைக்கு தயாராகும் தேஜஸ் போர் விமானம்: சிறப்புத் தகவல்கள்!
உள்நாட்டிலேயே தயாரான முதல் இலகு வகை போர் விமானமான தேஜஸ் விமானப் படையில் சேர்க்கப்பட்டு விட்டது. தற்போது, தேஜஸ் போர் விமானங்களை கொண்ட விமானப் படை பிரிவுகள் தொடர்ந்து அமைக்கப்பட உள்ளன. இந்த விமானப் படை பிரிவுகளுக்கு தேவையான தேஜஸ் போர் விமானங்களை முழு வீச்சில் தயாரித்து டெலிவிரி செய்யும் பணிகளை எச்ஏஎல் நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, பைலட் இல்லாமல் இயங்கும் தேஜஸ் போர் விமானத்தை உருவாக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன் இதுகுறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த நிலையில், தற்போது இந்த ஆளில்லா தேஜஸ் போர் விமானம் குறித்த சில முக்கியத் தகவல்களும் கசிந்துள்ளன. பைலட் இல்லாமல் இயங்கும் தேஜஸ் போர் விமானத்தை மிக குறுகிய காலத்தில் உருவாக்கிவிட முடியும் என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். Recommended Video – Watch Now! Tata Nexon Review: Expert Review Of Tata Nexon – DriveSpark மேலும், பைலட் மூலமாக இயக்கக்கூடிய தேஜஸ் போர் விமானத்தைவிட, ஆளில்லாமல் இயங்கும் தேஜஸ் போர் விமானத்தை வடிவமைப்பது சுலபம்தான் என்றும் அவர் கூறி இருக்கிறார். இதற்கான செயற்கை நுண்ணறிவு சாதனங்களை உருவாக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே, ரஸ்டன் -II என்ற சிறிய வகை ஆளில்லா விமானத்தை டிஆர்டிஓ உருவாக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தி இருக்கிறது. இந்த அனுபவத்தின் மூலமாக, ஆளில்லா தேஜஸ் போர் விமானத்தை உருவாக்குவதற்கான பணிகள் எளிதாக நடைபெற வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், 10 ரஸ்டன்-II ஆளில்லா விமானங்களை டிஆர்டிஓ உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, ஆளில்லா தேஜஸ் போர் விமானத்திற்கான தொழில்நுட்பங்கள் கிடைக்க எளிதான வழிவகை இருக்கிறது. பைலட் மூலமாக இயங்கும் தேஜஸ் போர் விமானத்தைவிட, ஆளில்லா தேஜஸ் போர் விமானத்தை உருவாக்குவதும், தயாரிப்பு செலவீனமும் குறைவாக இருக்கும் என்றும் எச்ஏஎல் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.