கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைத்திருந்த தன் தேர்தல் பிரசாரத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஓக்லஹாமா மாகாணத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க உள்ளார்.
நவம்பர், 3ம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் களமிறங்குகிறார். ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
இது தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்த ட்ரம்ப்,
“தேர்தல் பிரசாரத்தை, ஓக்லஹோமா மாகாணத்தின் துல்சா நகரில் இருந்து, மீண்டும் துவங்குவோம். அடுத்து, புளோரிடாவில் பிரமாண்ட பேரணியை நடத்துவோம்.அதைத் தொடர்ந்து, டெக்சாஸ், அரிசோனா, வட கரோலினா மாகாணங்களிலும், பெரிய அளவில் பேரணி நடத்துவோம்.”இவ்வாறு, அவர் கூறினார்.
ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் பேரணிகளில் கூடும் மக்கள் கூட்டத்தை விட, ட்ரம்பின் பேரணிகளில் அதிகமாகவே கூட்டம் காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், செய்தி நிறுவனங்களால் எடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், ஜோ பிடன் முன்னிலை வகித்து வருவதாகவும், இதனால் ட்ரம்பிற்கு ஆதரவு குறைவு என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தற்போது குறித்த கருத்து கணிப்புகள் பொய்யாகி விட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.