März 28, 2025

புறப்பட்டது சுமந்திரன் அணி?

தேர்தல் அறிவிப்பு வெளியானதும் கொழும்பிலிருந்த பல அரசியல் தலைவர்களும் மக்களை தேடி ஓடோடி வந்துள்ளனர்.
அதிலும் சந்திப்பதற்கு நேரமேயில்லாது ரணில்,மகிந்த ஜநாவென அலைந்த எம்.ஏ.சுமந்திரன் தற்போது யாழில் தங்கியுள்ளார்.
திருமண வீடு,காது குத்தென தனது தொண்டர் பட்டாளத்துடன் புறப்பட்டுள்ள அவர் தனது ஆதரவுக்கும்பல்களை சந்திக்க தொடங்கியுமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சுமந்திரனின் போட்டி அரசியல்வாதியான ஈ.சரவணபவன் தற்போதைய கருத்து கணிப்பின் படி முன்னிற்கு நிற்பதாக தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளது.