März 28, 2025

அரசியலில் திடீர் திருப்பம்!

நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

இன்று அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி, 2020 பொதுத்தேர்தல் பிரச்சார பணிகளிறிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தமது விருப்பு வாக்கிற்கு யாரும் வாக்கை செலுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

32 வருடங்களாக தமக்கு வாக்களித்த மாத்தறை மக்களிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.