மன்னார் புதைகுழியை மூடியவரும் கோத்தா செயலணியில்?
கிழக்கில் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான இலங்கை ஜனாதிபதியின் செயலணி தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பில் தொல்பொருள் இடங்களுக்கு நிலங்களை ஒதுக்குவது குறித்து அறிவுறுத்தல்கள் உள்ளன.
கிழக்கில் சிங்கள இனவாத குழுக்கள் கூறும் சந்தேகத்திற்குரிய தொல்பொருள் கூற்றுக்களுக்கு சட்டபூர்வமான சக்தியை வழங்குவதற்கான நடவடிக்கை இது என்று யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட வழக்கறிஞர், கல்வி மற்றும் சிவில் சமூக ஆர்வலர் குமாரவேல் குருபரன் கருத்து தெரிவித்துள்ளார்.
“தமிழர்களும் முஸ்லிம்களும் இப்போது கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால் சிங்கள இனவாத இயந்திரத்திற்கு எதிராக ஒரு அரசியல் சக்தியாக தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபடுவதே எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வடகிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டால், அசைக்க முடியாத சக்தியாக பரிணமிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக களனியாவின் தொல்பொருள் பேராசிரியர் ராஜ்குமார் சோமதேவா நியமனம் குறித்து குருபரன் குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பேராசிரியர் ராஜ்குமார் சோமாதேவாவின் கருத்தியல் அடித்தளங்கள், மன்னார் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் போது எங்களுக்கு முன்பே தெரியாது, ஆனால் அவை இப்போது மிகவும் தெளிவாக உள்ளன. இது போன்ற நியமனங்கள் காரணமாக அவரது ஈடுபாட்டிற்கு நம்பகத்தன்மை குறித்து மிகப்பெரிய கேள்வியை இது கொண்டு வருகிறது, ”என்றும் அவர் கூறினார்.
மன்னார் புதைகுழி அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கிய தொல்பொருள் ஆய்வாளர் சோமதேவா ஆவார். அவை வரலாற்றில் மிக முந்தைய காலத்திலிருந்து எஞ்சியுள்ளன என்ற கண்டுபிடிப்புகளுடன் புதைகுழியை அவர் இழுத்து மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.