யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு இவர்கள் தான் தம்மிடம் கோரிக்கை விடுத்தனர்! மஹிந்த….
2005ஆம் ஆண்டில் யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு நாட்டு மக்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனை செவிமடுத்து, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு செயலாளராக நியமித்து யுத்தத்தை வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைத்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.
சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்தாலும், யுத்தத்திற்கு முடிவு கட்டி சகல இன மக்களுக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.
தமது அரசியல் வாழ்க்கைக்கு ஐம்பது வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு, நேற்று அரச தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கருத்து வெளியிடுகையில், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நடுவழியைத் தேர்ந்தெடுத்த அரசியல் கட்சிக்காக இடதுசாரி அரசியல் கோட்பாடுகளுடன் பாடுபட்ட அரசியல்வாதி என்றார். அவர் நேரடித் தீர்மானங்களை எடுத்து யுத்தத்திற்கு முடிவு கட்டினார் என திரு. நாணயக்கார தெரிவித்தார்.