November 24, 2024

கழுத்து நெரிக்கும் முறை கைவிடப்படும் – பிரெஞ்சு உள்துறை அமைச்சர்

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவைக் கடந்து பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இனவெறிக்கும், காவல்துறையினரின் நவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணத்திற்குப் பின்னர் காவல்துறையினர் மீது எழுந்துள்ள விமர்சனங்களை கடுமையாக எழுந்துள்ளன.
இந்நிலையில், பிரான்சின் உள்துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் காஸ்டனர் இன்று திங்கட்கிழமை கருத்துரைக்கில்:-
கைது நடவடிக்கைகளின் போது, சந்தேக நபர் மீது காவல்துறையினர் கழுத்தை நீண்ட நேரம் நெரிக்கும் முறை கைவிடப்படும். அத்துடன் காவல்துறைப் பயிற்சிப் பள்ளிகளில் இம்முறை இனிமேல் கற்பிக்கப்படாது என்றார்.
சந்தேக நபர்கள் மீது காவல்துறையினரால் முழங்கால்களால் அழுத்தம் கொடுத்து நபர் அசையாமல் இருக்கும் நுட்பங்கள் உலகெங்கிலும் காவல்துறையில் பயன்படுத்தப்படுகின்றனர்.
இதற்கு நீண்டகாலமாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறையை தடை செய்ய பிரெஞ்சு சட்டம் இயற்றுபவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
காவல்துறையில் மிருகத்தனமான இனவெறியை நிவர்த்தி செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தால் தூண்டப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கிலும் கோபத்தைத் தூண்டுவதால், காவல்துறையின் வன்முறை மற்றும் இனவெறி குறித்த வளர்ந்து வரும் கவலைகளை நிவர்த்தி செய்ய பிரான்சின் அரசாங்கம் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மக்ரோனின் அலுவலகம் அவர் வார இறுதியில் பிரதமர் மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் பேசியதாகவும், ஜனவரி மாதம் ஆரம்பத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட காவல்துறை நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை மந்திரி கிறிஸ்டோஃப் காஸ்டனர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஃப்ளாய்டின் மரணம் மற்றும் பிரான்சில் என்ன நடக்கிறது என்பது குறித்து இதுவரை வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்துவருகிறார்.